பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 பொங்கல் விழா கொண்டாட்டம்

செஞ்சி:செஞ்சி ஸ்ரீதரணி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் தண்டபாணி தலைமை தாங்கினார். இயக்குனர் தரணி தண்டபாணி விழாவை துவக்கி வைத்தார். தாளாளர் டாக்டர் தமிழ்க்குமரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆஷா வரவேற்றார். இயக்குனர்கள் சந்தோஷா தமிழ்க்குமரன், தமிழ் வள்ளி, டாக்டர் பார்க்கவா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.விழாவில், தனித்தனி குழுவாக கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி, பொங்கல் வைத்தனர். மாணவர்களின் பாரம்பரிய நடனம், சிலம்பாட்டம், உறியடி, மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது. பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு, அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்பருகம்பட்டு எஸ்.கே.வி., ைஹடெக் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, ஆர்.கே. ஐ.டி.ஐ., தாளாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். நியூட்டன் ஐ.டி.ஐ., தாளாளர் ஜெயச்சந்திரன், நடராஜ் ஐ.டி.ஐ., தாளாளர் மேகநாதன் முன்னிலை வகித்தனர்.
மேலாளர் குமரகுரு நாதன், கே.எம்.பி. ஐ.டி.ஐ., முதல்வர் ராதாகிருஷ்ணன், பழநிவேலு ஐ.டி.ஐ., முதல்வர் சத்யராஜ் வாழ்த்திப் பேசினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.ஆசிரியர்கள் ஷாலினி, பிரேமா, ஜோஸ்பின், இந்துமதி, ராஜலட்சுமி, ஜாஸ்மின் மினுரோசி பங்கேற்ற னர். பள்ளி முதல்வர் பாக்யலட்சுமி நன்றி கூறினார்.
வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளிவிழாவிற்கு, பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X