பொது செய்தி

தமிழ்நாடு

'வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் பயன்படுத்தினால் நடவடிக்கை'

Added : ஜன 15, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், போலி செய்தியாளர்கள் பலர் தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீசாரின் நடவடிக்கையில் இருந்த தப்பிக்க 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்.போலி செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டுவதை வரைமுறைபடுத்த கோரி பத்திரிக்கை செய்தியாளர்கள் மற்றும் ஊடக துறையினர் நேற்று எஸ்.பி., ஜெயச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.
உடனடியாக வாக்கி டாக்கி மைக் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.அதில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை மற்றும் ஊடக துறையில் பணிபுரிபவர்கள், தங்களது வாகனங்களில் பயன்படுத்துவதற்கு அரசு முத்திரையுடன் அதிகாரி கையொப்பமிட்ட 'ஊடகம் மற்றும் மீடியா' என்ற ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. அதுபோன்று அரசின் மூலம் வழங்கப்படும் ஸ்டிக்கர் ஓட்டிச் செல்லும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை அனுமதிக்கலாம்.
அச்சிடப்பட்ட 'பிரஸ்' ஸ்டிக்கர் ஓட்டிச் செல்வதை அனுமதிக்க கூடாது. அதுபோன்று செல்பவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்தால் அவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மட்டுமே என்று தெரிவித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X