சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

Added : ஜன 15, 2020
Advertisement

விழுப்புரம்:பஸ்சில் பயணம் செய்த பெண் ணிடம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த டி.ஆத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 50; முன்னாள் படைவீரர். இவரது மனைவி செல்வி, 46; இவர், நேற்று காலை விழுப்புரத்திற்குச் சென்று காகுப்பம் சாலையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான மானிய விலை அங்காடியில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கியுள்ளார்.பின்னர், அங்கிருந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சென்று, திருக்கோவிலுார் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், செல்வி வைத்திருந்த பையில் இருந்த மொபைல், மணிபர்ஸ் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.பர்சில் பணம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு, மானிய விலை அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அட்டை ஆகியவை இருந்துள்ளது.இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X