பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பாதுகாப்பு பணி: எஸ்.பி., ஆலோசனை

Added : ஜன 15, 2020
Advertisement
 பொங்கல் பாதுகாப்பு பணி: எஸ்.பி., ஆலோசனை

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் விழா பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பொங்கல் விழாவையொட்டி இன்றும் நாளையும் கடைவீதிகள், கோவில்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். மேலும், கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தவிர்க்க மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணிகள் குறித்து விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் போலீசார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில், பொங்கல் விழா பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து போலீசாருக்கு எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.ஏ.டி.எஸ்.பி., சரவணகுமார், டி.எஸ்.பி.,க்கள் ராஜன், அஜய்தங்கம் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X