பொது செய்தி

தமிழ்நாடு

காணும் பொங்கல் பாதுகாப்பு செஞ்சியில் அதிகாரிகள் ஆலோசனை

Added : ஜன 15, 2020
Advertisement
 காணும் பொங்கல் பாதுகாப்பு செஞ்சியில் அதிகாரிகள் ஆலோசனை

செஞ்சி:செஞ்சிக்கோட்டைக்கு காணும் பொங்கலன்று வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டைக்கு காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் செஞ்சி போலீஸ் நிலையத்தில் நடந்தது.தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்ரமணியன் வரவேற்றார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதுசூதனன், சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், சண்முகராஜன், பி.டி.ஓ.,க்கள் அறவாழி, சுப்ரமணியன், செஞ்சிக்கோட்டை பராமரிப்பு அலுவலர் ஹரீஷ், தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, பேரூராட்சி மேற்பார்வையாளர் ரமேஷ் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளை செய்வது எனவும், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் அமைப்பது என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பு கட்டைகள் அமைப்பது என்றும், வாகனங்களை நிறுத்தும் இடத்தை தேர்வு செய்து தடையின்றி சென்று வர ஏற்பாடு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X