பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் நடத்தும் பொங்கல் முப்பெரும் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

பொள்ளாச்சி:கோட்டூரை அடுத்த தென்சங்கம்பாளையத்தில், ஒளி ஆலயம் மாற்றுத் திறனாளிகள் சேவை அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வரும், 17ம் தேதி முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

தென்சங்கம்பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடத்தும் நிகழ்ச்சியில், ஒளி ஆலயம் அறக்கட்டளை மற்றும் தென்றல் மறுவாழ்வு அறக்கட்டளை அமைப்புகளில், 18ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடக்கிறது.

விழாவில், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாக, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X