பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ 'சீட்' வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 மருத்துவ 'சீட்' வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

மரக்காணம்:மரக்காணம் அருகே மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த உப்புவேலுாரை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் பன்னீர்செல்வம்,58; தற்போது, புதுச்சேரி, அண்ணா நகரில் வசிக்கிறார்.இவர் கடந்த 2017ம் ஆண்டு, மரக்காணம் அருகே செட்டிகுப்பத்தை சேர்ந்த ராஜசேகர் மகள் வினோபா,60; என்பவரை சந்தித்து, தான், டில்லியில் உள்ள மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக இருப்பதாக கூறியுள்ளார்.மேலும், வினோபாவின் உறவினர் ஒருவருக்கு, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவ சீட் வாங்கி தருவதாகவும், அதற்காக 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.இதை நம்பி, 50 லட்சம் ரூபாய் கொடுத்த வினோபவிடம், மெடிக்கல் கவுன்சில் இணை இயக்குனர், மருத்துவ சீட் ஒதுக்கீடு செய்ததாக ஆணையை பன்னீர்செல்வம் வழங்கி உள்ளார்.அது போலி என அறிந்த வினோபா, கொடுத்த பணத்தை பல முறை திருப்பி கேட்டும், பன்னீர்செல்வம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.கடந்த 2018ம் ஆண்டு, அக்., 9ம் தேதி, உப்புவேலுாரில், பணத்தை கேட்ட வினோபாவை, பன்னீர்செல்வம் திட்டி,கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வினோபா அளித்த புகாரின்பேரில், பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்து, வானுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு, மூன்று மாதங்களில் பணத்தை திருப்பித் தருவதாக கூறி வெளியே வந்தவர், தற்போது வரை பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து வினோபா, ஐ.ஜி., நாகராஜை சந்தித்து புகார் கூறினார். ஐ.ஜி., உத்தரவின் பேரில், எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் கிளியனுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார், நேற்று பன்னீர்செல்வத்தை, புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து, திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
16-ஜன-202020:38:50 IST Report Abuse
Muthukrishnan,Ram அவரது மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து பிச்சை எடுக்க வேண்டும். அடுத்தவன் சொத்துக்கு ஆசை பட்டால் இதுதான் கதி என்று மற்றவர் திருந்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜன-202008:15:26 IST Report Abuse
Natarajan Ramanathan ஐ.ஜி., உத்தரவின் பேரில், எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் கிளியனுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் .............லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் மருத்துவசீட் பெறமுயன்ற வினோபாவுக்கு என்ன தண்டனை??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X