வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மஹா சங்கடஹர சதுர்த்தியை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாதத்தில் வரும் முதல் மஹா சங்கடஹரசதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி விநாயகருக்கு நேற்று முன் தினம் மாலை, 6:30 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:10 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மஞ்சள்கயிறு, குங்குமம், திருநீறு, பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE