சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்கோனாவில் யானை நடமாட்டம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை நீட்டிப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

வால்பாறை:சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்லும், சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதியில், யானைகள் முகாமிட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், யானைகள் தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்டுகளில் முகாமிட்டுள்ளன.யானைகள் பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள் பயிரிடப்பட்டுள்ள வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கின்றன.இது தவிர, ரேஷன் கடைகளை தாக்கி, பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதனிடையே, வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட் கோவில்களில் தற்போது பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதனால், எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் முழுவதும் சின்கோனா 'டான்டீ', சின்னக் கல்லார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளன.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்லும் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக முகாமிட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

யானை ஆக்ரோஷம்!

வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த, 12ம் தேதி நள்ளிரவு வந்த ஒற்றை யானை, கோவில் அருகே நடந்து சென்ற சுரேஷ், 42, என்பவரை மிதித்துக்கொன்றது. அதன் பின், இந்த யானை கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரத்திலேயே இந்தப்பகுதியில் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதனிடையே யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X