சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு ஆயத்தம் காப்புக்கட்டு தலை விலை ரூ.10

Added : ஜன 15, 2020
Advertisement
 பொங்கல் பண்டிகைக்கு ஆயத்தம் காப்புக்கட்டு தலை விலை ரூ.10

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கடைகளில், பொங்கல் பண்டிகையை யொட்டி வியாபாரம் களை கட்டியது.

கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் முதல் செக்போஸ்ட் வரை ஒரு கி.மீ., துாரத்திற்கு, பொங்கல் பண்டிகைக்காக இரண்டு பக்கங்களிலும் கரும்பு கடைகளும், மண்பாட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.இன்று தைப் பொங்கல் நாளில், சூரிய பொங்கல் வைப்பதற்காக, மக்கள் ஒரு ஜோடி கரும்பு நுாறு ரூபாய்க்கும், மஞ்சள் கொத்து, 40 ரூபாய்க்கும் வாங்கி சென்றனர்.மேலும், காப்பு கட்டுவதற்காக, வேப்பில்லை, பூளைப்பூ, ஆவாரம்பூ, மாந்தலைகளை ஒன்றாக கட்டி, ஒரு கட்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம் போன்றவைகளை வாங்க மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.புதிதாக ஆடைகள் வாங்குவதற்கும், தங்க நகைகள் வாங்குவதற்கும், ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கும் சென்றனர். கிணத்துக்கடவு பகுதியில், பொங்கல் பண்டிகை மூன்று நாட்களிலும் கரும்பு வியாபாரம் அதிகளவில் விற்பனையாகும் என்பதால், தேனி மாவட்டம், சின்னமன்னுாரில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதற்கு,மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானை விற்பனையும் சூடுபிடித்தது.இதனால், கிணத்துக்கடவு பகுதியில், பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை களைகட்டியுள்ளது. கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X