பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 14 லட்சம் நிதியில் சிறுபாலம் பணி தீவிரம்

Added : ஜன 15, 2020
Advertisement
 ரூ. 14 லட்சம் நிதியில்  சிறுபாலம் பணி தீவிரம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் ரோட்டில், 14 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பாலம் கட்டும் பணி நடக்கிறது.

தாமரைக்குளம் - வேலாயுதம்பாளையம் ரோட்டின் குறுக்கே செக்டேம் உள்ளது. இதில் இருந்து வழிந்து செல்லும் தண்ணீர் ஒடையில் இணைகிறது. இங்கு, ஏற்கனவே பாலம் இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த மழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து, அருகில் உள்ள ரோட்டில் சென்றது.இதனால், பழைய பாலம் உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற நல்லட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால், வாகனங்கள் செல்வது தடைபட்டது.

இதனை தொடர்ந்து, 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறுபாலம் கட்டும் பணி கடந்த மாதம் துவங்கியது. சிறுபாலத்தின் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு தண்ணீர் செல்லாத அளவுக்கு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இப்பணி இம்மாத இறுதிக்குள் நிறைவு பெற்றதும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X