சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத மது விற்பனை சப் - கலெக்டரிடம் புகார்

Added : ஜன 15, 2020
Advertisement

பொள்ளாச்சி:'சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்,' என சப் - கலெக்டரிடம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார்.பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் விக்ரம் முத்து ரத்தின சபரி கொடுத்த மனு:

ஆனைமலை தாலுகா ஒடையகுளம், அய்யன் குளம் கடந்த செப்., மாதம் மாவட்ட கலெக்டர், தாசில்தார் அனுமதியுடன், சங்கம் மற்றும் விவசாயிகள் பங்களிப்புடன் குளம் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக குளத்தின் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. ஆனைமலையை சேர்ந்த நபர் ஒருவர் அனுமதியின்றி மீன் குஞ்சுகளை வளர்த்து வருவதுடன், அதற்கு இரையாக கழிவுகளை கொட்டி வருவதாகவும் தெரியவருகிறது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியபோது கிராமத்தில், தனியார் தோட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X