பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மாட்டுச்சந்தை நகராட்சி வருவாய் இழப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக இயங்கும் மாட்டுச்சந்தையை தடை செய்யக் கோரி, பா.ஜ., மாவட்ட நிர்வாகி மனு அளித்துள்ளார்.

பா.ஜ., மாவட்ட தொழிற்சங்கங்கள் அணி தலைவர் செந்தில்குமார் சப் - கலெக்டரிடம் அளித்த மனு:பொள்ளாச்சி மாட்டுச்சந்தை, 100 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் வாய்ந்தது. நகராட்சி நிர்வாகத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் அளித்து வந்தது. இந்நிலையில், மாட்டுச்சந்தையை செல்வாக்கு வாய்ந்த சிலர், அரசு துறைகளில் எவ்வித அனுமதியும் பெறாமல், தங்கள் சுயலாபத்துக்காக திப்பம்பட்டியில் உள்ள தனியார் இடத்துக்கு மாற்றியுள்ளனர்.

இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்திடம் திப்பம்பட்டியில் சந்தை நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், 15க்கும் மேற்பட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெற்ற பிறகு தான் அனுமதி அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது. ஆனாலும், அனுமதி இன்றி சந்தை தொடர்ந்து திப்பம்பட்டியில் நடக்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியும், முறையான அனுமதி இன்றியும் சட்டவிரோதமாக செயல்படும் திப்பம்பட்டி மாட்டுச்சந்தையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X