பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயின் குறுக்கே பாலம் அதிகாரிகள் வலியுறுத்தல்

Added : ஜன 15, 2020
Advertisement

பொள்ளாச்சி:ஆவலப்பம்பட்டி அருகே, பி.ஏ.பி., கால்வாய் பாலத்தை அகலப்படுத்த, பொதுப்பணித்துறையிடம் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டி அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாய் அமைந்துள்ளது. கால்வாயின் குறுக்கே, ஜோத்தம்பட்டி செல்லும் ரோடும், கொண்டேகவுண்டனுார் - மூலனுார் ரோடும் அமைந்துள்ளன. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், கால்வாயின் குறுக்கே, இருவேறு இடங்களில் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து, பலமிழந்து காணப்படுகின்றன.

இவற்றில் ஆவலப்பம்பட்டி பாலத்தின் வழியே மட்டும் வாகனங்கள் செல்கின்றன. மூலனுார் பாலம் அகலமில்லாததால், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ் கூறுகையில், ''பாலத்தை அகலப்படுத்த வேண்டும். வழியோரத்தில் உள்ள, ஆழமான திறந்தவெளி நீர் நிலைகளை ஒட்டி, பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும், என, பொதுப்பணித்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X