பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்கை வேட்டையாடினால் சிறை: வனத்துறை அதிகாரி எச்சரிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனப்பகுதி, 10 ஆயிரத்து, 830 ஹெக்ேடர் பரப்பில் அமைந்துள்ளன. இதில், யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு, கரடி, குரங்கு என, பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன.

தற்போது வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், தடுப்பணைகளில் தண்ணீர் இருப்பதால், வன விலங்குகள் விவசாய நிலங்களை நோக்கி வருவது குறைந்துள்ளன.இந்த வனப்பகுதிகளில் சிலர், முயல், கீரி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாடி அவற்றின் இறைச்சி மற்றும் தோலை அன்னுார், சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், அன்னுார் செல்லும் சாலையில், மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற இருவரை, சிறுமுகை வனத்துறையினர் கைது செய்து, அபராதம் விதித்தனர். இருந்த போதும் தொடர்ந்து மான் வேட்டை நடைபெற்றுக் கொண்டுள்ளன. பொங்கல் விடுமுறையால், சில சமூக விரோதிகள், மான் வேட்டையில் ஈடுபடுவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து வனப்பகுதியில் தீவிர சோதனை நடத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறியதாவது:பொங்கல் விடுமுறையை அடுத்து, சில சமூக விரோதிகள் மான் வேட்டையில் ஈடுபட உள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. வன விலங்குகளை வேட்டையாடுதலை தடுக்க, வனச்சரக அலுவலர் தலைமையில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து, நான்கு குழுக்களாக இரவு, பகலாக வனப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமுகை வனப்பகுதி அருகே, 12 கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிகளில் புதிய ஆட்கள் நடமாட்டம் இருந்தால், வனத்துறைக்கு கிராம மக்கள் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். சிறுமுகை வனச்சரக அலுவலரை 94427 01530 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வன விலங்குகளை வேட்டையாடும் நபர்களுக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X