பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல்

Added : ஜன 15, 2020
Advertisement
 பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல்

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள, பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அன்னுார் அடுத்த சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று பொங்கல் விழா தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து, பிளஸ்1 மாணவர்கள் பேசினர். ஆசிரியைகள், மாணவியர்கும்மி பாடல்கள் பாடியபடி கும்மியடித்தனர்.

* காரமடை ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரியில், பசுமை பொங்கல் விழா நடந்தது. இவ்விழாவுக்கு கல்லுாரியின் அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார்.மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்தனர். உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடந்தன. நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆகியவை நடந்தன.

* காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளியில் நடந்த பொங்கல் விழாவிற்கு, பள்ளி தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஆசிரியைகள் சூரிய பொங்கல் வைத்தனர். ஆசிரியைகளுக்கு கும்மியாட்டம், கோலப் போட்டிகள் நடந்தன.

* பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரியில், பல்வேறு துறைகளின் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இருளர் இன மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.

* துடியலுார் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் தமிழ்மன்றம் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து, பொங்கல் விழா கொண்டாடின. இதில், பறையடித்தல், சிலம்பாட்டம், உரியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழ் மன்றம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

* பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

* பெரியநாயக்கன் பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள செயிண்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கிராமத்து குடில் அமைத்தனர். அவர்களே வளர்த்து, அறுவடை செய்த கைக்குத்தல் அரிசியில் பொங்கல் வைத்தனர். கும்மி, கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

* துடியலுார் நாயர்ஸ் வித்யா மந்திர் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உறியடி திருவிழாவில் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.* பெரியநாயக்கன்பாளையம் அருகே யுனைடெட் கல்வி குழுமங்களின் அங்கமான இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரி, பார்மசி கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
-நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X