பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளைக் குதிரையில் அரங்கநாதர் திருவீதி உலா

Added : ஜன 15, 2020
Advertisement
 வெள்ளைக் குதிரையில் அரங்கநாதர் திருவீதி உலா

மேட்டுப்பாளையம்,:காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை அடுத்து, அரங்கநாத பெருமாள் வெள்ளைக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம், 27ம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியையடுத்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்று இரவு ராப்பத்து உற்சவம் துவங்கியது.ஒவ்வொரு நாளும் அரங்கநாத பெருமாள், ஒவ்வொரு அலங்காரத்தில் திருவீதி உலா வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, அரங்கநாத பெருமாள், வெள்ளைக் குதிரை வாகனத்தில், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X