சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி மேலாளர் வீட்டில் 18 சவரன் நகை திருட்டு

Added : ஜன 15, 2020
Advertisement

பெ.நா.பாளையம்,:கவுண்டம்பாளையத்தில் வங்கி மேலாளர் வீட்டில், கதவின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

கவுண்டம்பாளையம் தேமையர் வீதியில் வசிப்பவர் மதியழகன், 50. இவர் கோவையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், தனது குடும்பத்துடன் சொந்த ஊரான சென்னை அருகே உள்ள ஜோலார்பேட்டை சென்றார். நேற்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட, 18 பவுன் நகை மற்றும் ரொக்கம், 5,000 ரூபாய் காணாமல் போயிருந்தது. இது குறித்து, மதியழகன் துடியலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X