பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட செயலர் பதவி 'காக்கா' பிடிக்கும் பிரமுகர்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு, மேற்கு மாவட்ட செயலரான வாலாஜாபாத் கணேசன், பொங்கல் பரிசு வழங்கி, அவர்களை, 'காக்கா' பிடித்து வருகிறார்.

காஞ்சிபுரம், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலராக வாலாஜாபாத்கணேசன் உள்ளார்.இவர், ஆண்டுதோறும் பொங்கலுக்கு, கட்சியின் கிளை செயலர்கள்; ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு, வேட்டி, சட்டை மற்றும் 500 ரூபாயும், மகளிருக்கு, சேலை மற்றும் 200 ரூபாயும், பொங்கல் பரிசாக வழங்கி வந்தார்.

கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக கணேசன் நியமிக்கப்பட்டார். இதனால் தற்போது, கட்சி நிர்வாகிகளுக்கு இலவச வேட்டி, சட்டையுடன், 1,000 ரூபாயும், கழக மகளிருக்கு, சேலையுடன், 500 ரூபாயும் வழங்கி வருகிறார்.

இது குறித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலராக, கணேசன் இருந்தபோது, ஒரு சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு வழங்குவார். இப்போது, ஊராட்சி செயலர் மற்றும் கிளை கழக செயலர்கள் அனைவருக்கும்வேட்டி, சட்டையுடன், 500 ரூபாய் பரிசு வழங்கி வருகிறார்.

மாவட்ட செயலர் பதவிக்கு, இப்போதே ஆட்களை, 'காக்கா' பிடித்து, காய் நகர்த்துகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல், காஞ்சிபுரம் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் மாவட்ட செயலர் சோமசுந்தரம், அதே கட்சி நிர்வாகிகளை அழைத்து வேட்டி, சட்டை மற்றும் 500 ரூபாய் கொடுத்து வருகிறார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X