தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டுது: சுற்றுலா தலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
பொங்கல், பண்டிகை, கொண்டாட்டம்,  களைகட்டுது, சுற்றுலாதலங்கள், சிறப்புஏற்பாடுகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், பொங்கல் விழா களை கட்டுகிறது. பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை, பொதுமக்களுக்கான சுற்றுலா ஏற்பாடுகள் என, கொண்டாட்டம் அரங்கேறுகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா, நேற்று துவங்கியுள்ளது. மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என, அடுத்தடுத்த நாட்களிலும் கொண்டாட்டம் இருப்பதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நேற்று, போகியை முன்னிட்டு, பழைய பொருட்களை கொளுத்தி, போகி மேளம் அடித்து, பண்டிகையை கொண்டாடினர்.


மகிழ்ச்சி



சூர்ய பொங்கலான இன்று, பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று, அமோகமாக நடந்தது.வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகமாக இருப்பதால், கரும்பு, விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், மகிழ்ச்சியுடன், அதிகபடியான கரும்புகளை வாங்கி சென்றனர்.

நாளைய மாட்டு பொங்கலுக்கு, பசு, காளை எருதுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வர்ணம் பூசி, பல வண்ண கயிறுகளை, கால்நடைகளுக்கு அணிவர்.சவுக்கு தடுப்புஇதனால், மாடுகளுக்கான அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களில் அதிகம் முளைத்துள்ளன.குறிப்பாக, தொடர் விடுமுறையால், மாமல்லபுரம் கலை சிற்பங்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில், பயணியர் கூட்டம் அதிகரிக்கும். இதற்காக, மாமல்லபுரத்தில், பயணியருக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.

பயணியருக்கு அடிப்படை வசதிகள், கண்காணிப்பு கேமரா, வாகன இயக்கம், நிறுத்துமிடம் என, முக்கிய ஏற்பாடுகளை, பேரூராட்சி மற்றும்காவல் நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.பயணியர் கடலில் இறங்காமல் இருக்க, சவுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா வாகனங்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகம், கல்பாக்கம், பக்கிங்ஹாம் கால்வாய்க்கரை, வெண்புருஷம், கோவளம் சாலை பகுதிகளில் நிறுத்த, காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.


போலீசார் முகாம்



அரசு, மாநகர் பஸ்கள், புறவழிப்பாதை சந்திப்பு பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. இங்கிருந்து, பஸ் நிலைய பகுதிக்கு, தலா, ஐந்து ரூபாய் கட்டணத்தில், வேன்கள் இயக்கப்படுகிறது. வடநெம்மேலி, தனியார் முதலைப் பண்ணை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசார் முகாமிட்டுள்ளனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் பிரமாண்ட திருவள்ளுவர் சிற்பம்திருவள்ளுவர் தின விழாவை, மல்லை தமிழ் சங்கம், ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் கொண்டாடுகிறது.கடந்த, 2018ல், கடற்கரை மணற்பரப்பில், பிரமாண்ட திருவள்ளுவர் மணற்சிற்பம் அமைத்து, திருக்குறள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. திருவள்ளுவர் தினமான, நாளை மறுநாள், கடற்கரை மணலில், பிரமாணட திருவள்ளுவர் சிற்பத்தை வடித்துள்ளது.

அரசு சிற்பக் கல்லுாரி மாணவர்கள், சிற்பக்கலைஞர்கள் என, 100க்கும் மேற்பட்டோர், சில நாட்களாக, இதை உருவாக்கினர். இச்சிற்பம், தரைப் பகுதியிலிருந்து, 15 அடி உயர மணற்குன்று உருவாக்கி, 70 அடி நீளம், 40 அடி அகலம் என, சாய்தளமாக அமைக்கப்பட்டு உள்ளது.இதன் பீடத்தில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் கருத்தை உணர்த்தும், விவசாயி உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது.

 - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X