தோல் கழிவு சுத்திகரிப்பால் மாசடையும் குடிநீர் புத்தளி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு

Added : ஜன 15, 2020
Advertisement

காஞ்சிபுரம்:தோல் கழிவு சுத்திகரிப்பு கிடங்கால், புத்தளி கிராமத்தில் குடிநீர் மாசடைவதாக, பொதுமக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம், நேற்று முன்தினம் நடந்த குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.

துர்நாற்றம்

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் பொன்னையா தலைமையில், நேற்று முன்தினம்காலை நடந்தது.அப்போது, உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள புத்தளி கிராமத்தினர் அளித்த மனு விபரம்:புத்தளி பழைய காலனி பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள், 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில், தோல் கழிவு சுத்திகரிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

இதனால், குடிநீர், காற்று மாசடைந்து வருகிறது. ஆடு, மாடுகளுக்கு நோய் ஏற்பட்டும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. புத்தளியில் செயல்படும் தோல் கழிவு சுத்திகரிப்பு கிடங்கை அகற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சிறுகாவேரிப்பாக்கம் ஏரியில் மணல் கொள்ளையடிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அளித்த மனு விபரம்:நடவடிக்கைசிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி, புத்தேரி கிராமத்தினர் பயன்படுத்தக்கூடிய பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, சமீபத்தில், ஏல அறிவிப்பில் குத்தகை விடப்பட்டது.ஏரியில் உள்ள வேலிகாத்தான் மரங்களை வெட்டி அகற்றவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால், பொக்லைன் மூலமாக, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், 6 யூனிட் மணலை, லாரியில் ஏற்றி கடத்துகின்றனர். லாரி செல்வதற்கு, ஏரியின் கரையை உடைத்து பாதை அமைத்துள்ளனர்.ஒப்பந்ததாரர், அரசு விதிமுறைப்படி மணல் எடுக்கவும், மணல் கடத்தலை தடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X