பொது செய்தி

தமிழ்நாடு

தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க 9 மையங்கள் அறிவிப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, 9 மையங்கள் அமைக்கப்படுவதாக, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வரும் மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில், தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, 'தத்கல்' திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு துறை தெரிவித்துள்ளது.

தனித்தேர்வர்கள், வரும், 20, 21 ஆகிய இரு நாட்களில், விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மையங்கள்:

* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு

* சி.எஸ்.ஐ., செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு

* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்

* சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

* நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

* எச்.எஸ்.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்

* ஜே.ஜே., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்பதுார்

* செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்

* அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X