பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்பாட்ட போட்டி மாணவர்களுக்கு பாராட்டு * பட்டம் விருப்பம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 சிலம்பாட்ட போட்டி மாணவர்களுக்கு பாராட்டு * பட்டம் விருப்பம்

கும்மிடிப்பூண்டி:மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தேர்வான மாணவர்களை, பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த, 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில், கும்மிடிப்பூண்டி, கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம் அணியில் இடம் பெற்றிருந்தனர்.அவர்களில், எட்டாம் வகுப்பு பயிலும் கே.வித்யாசாகர், ஏழாம் வகுப்பு பயிலும் எஸ்.இந்துமதி ஆகிய இருவர், அந்தந்த வயது மற்றும் எடைப் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.மேலும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் யுகேஷ், மாணவி திவ்யபாரதி, ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
மேற்கண்ட நான்கு பேரும், தேசிய அளவில் நடைபெற இருக்கும் சிலம்பாட்ட போட்டிகளில் பங்கேற்க, தேர்வாகி இருப்பதால், பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.பள்ளி முதல்வர் மற்றும் தலைவர் திருஞானம், தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பங்கேற்றனர்.அப்போது, வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர் கண்ணனையும் பாராட்டி, கவுரவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X