பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள உதவியாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜன 15, 2020
Advertisement

திருவள்ளூர்:மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட, மீன்வள துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், பூண்டி மீன் துறை ஆய்வாளர் அலுவலகத்தில், காலியாக உள்ள மூன்று மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன் துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுடைய நபர்கள், தங்களது கல்வி, ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவையுடன், பிப்., 5ம் தேதிக்குள், மீன் வள துறை இணை இயக்குனர், தேனாம்பேட்டை, சென்னை- - 600 006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X