பொது செய்தி

தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மை திட்டம் தாழவேடு ஊராட்சியில், 'அம்போ'

Added : ஜன 15, 2020
Advertisement
 திடக்கழிவு மேலாண்மை திட்டம் தாழவேடு ஊராட்சியில், 'அம்போ'

திருத்தணி:ஊராட்சியில், சுகாதாரம் ஏற்படுத்தவும், குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்திற்காக வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை குப்பை தொட்டிகள், பல மாதங்களாக பயன்பாட்டிற்கு விடாமல், ஊராட்சி அலுவலகம் முன், வரிசை கட்டி, நிறுத்தப்பட்டு உள்ளதால், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி தொய்வு அடைந்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு ஊராட்சியில், தாழவேடு கிராமம் மற்றும் காலனி, தும்பிகுளம், இருளர் காலனி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.ஊராட்சியில், சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், துாய்மை பாரத இயக்கம் சார்பில், 2018- - 19ல், தாழவேடு ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், புதிய, 10 குப்பை தொட்டிகளை, மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.அந்த குப்பை தொட்டிகளை மேற்கண்ட கிராமங்களில் உள்ள முக்கிய தெரு, சாலையில் வைக்காமல், ஊராட்சி மன்ற அலுவலகம் முன், ஒரே இடத்தில் பல மாதங்களாக வைக்கப்பட்டு உள்ளது.இதனால், ஊராட்சியின் பல இடங்களில், குப்பை தேங்கியும், திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா கோபி, துணைத் தலைவர் சித்ரா சின்னமணி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பை தொட்டிகளை பயன்பாட்டிற்கு விடுமாறு, ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X