பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரை ஆலைக்கு 3 நாள் விடுமுறை

Added : ஜன 15, 2020
Share
Advertisement

திருவாலங்காடு:பொங்கல் பண்டிகையையொட்டி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, இன்று முதல், மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாலங்காடில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்த டிசம்பர், 1ம் தேதி, நடப்பாண்டிற்கான கரும்பு அரவை துவங்கியது. தற்போது வரை, 1.02 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, தொழிலாளர்கள் நலன் கருதி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் கரும்பு அரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பாண்டில், 1.34 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிட்டு அரவை துவங்கிஉள்ளோம். தற்போது, 1.02 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு உள்ளது.பதிவு செய்யாத கரும்புகளும், அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று முதல், வரும், 17ம் தேதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை கரும்பு அரவை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X