சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தற்கொலை

Added : ஜன 15, 2020
Advertisement

நகரி: சித்துார் மாவட்டம், வரதய்யபாளையம் அடுத்த, சந்தைவேலுார், சாத்தப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர், மனோகர், 36. விவசாயி.இவர், தன் நிலத்தில், கரும்பு, நெல் பயிரிட்டிருந்தார். இதற்காக, பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி தருமாறு மனோகரை நச்சரித்தனர்.இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வரதய்யபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பழைய குற்றவாளிகளுக்கு சிறை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் சுரேஷ், பிரவீன், ஹரிபிரசாத், சூரியா, தீபக், பாபு என, ஆறு பேரை, விஷ்ணு காஞ்சி போலீசார், நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன.
மோசடி நபர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர், தங்கராஜ் மகன் தினேஷ், 29; பி.டெக் பட்டதாரி.வேலை இல்லாமல் இருந்த தினேஷுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, தங்கராஜிடம், வேலுார் மாவட்டம் மேல்மனுாரைச் சேர்ந்த உதயகுமார், 27, என்பவர், 3.69 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால், வேலை வாங்கி தருவதற்கான எந்த நடவடிக்கையும், உதயகுமார் எடுக்கவில்லை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, தங்கராஜ் அளித்த புகாரின்படி, உதயகுமாரை, விஷ்ணு காஞ்சி போலீசார், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X