பொது செய்தி

தமிழ்நாடு

பழவேற்காடில் காணும் பொங்கலில் கூடுதல் பாதுகாப்பு தேவை

Added : ஜன 15, 2020
Advertisement

பழவேற்காடு:காணும் பொங்கல் தினத்தில், பழவேற்காட்டில், ஒரு லட்சம் சுற்றுலாப் பயணியர் கூடும் நிலை உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழவேற்காடு சுற்றுலாத் தளத்தில், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, ஒரு லட்சத்திற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணியர் அங்கு வந்து செல்கின்றனர்.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கடலில் குளிக்கும் இளைஞர்களை விரட்டவும் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பிற்கு ஏற்ப, போதிய போலீசார் நியமிக்கப்படுவதில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.குறைந்த போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால், தடையை மீறி செல்லும் படகு சவாரிக்கு கண்காணிக்க முடிவதில்லை. நாளை மறுநாள் காணும் பொங்கலை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் இங்கு வருவர். அவர்களது பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளதாவது:கடற்கரை பகுதியில்தான் சுற்றுலா பயணியர் அதிகமாக கூடுவர். அங்கு சுற்றுலா பயணியர் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.அவசர உபாதைகளை கழிக்க, சுற்றுலா பயணியர் அவதிப்படுவதால், பயோ டாய்லெட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.மருத்துவ குழுவினருடன்கூடிய அவசர ஊர்தி வைத்திருக்க வேண்டும். ஒலிபெருக்கி பொருத்தி, அதன் மூலம் சுற்றுலா பயணியரை எச்சரிக்க வேண்டும்.அசம்பாவிதங்களை தவிர்க்க தேவையான போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X