பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் பணிகளில் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 15, 2020
Advertisement

மாமல்லபுரம்: அறநிலையத் துறை கோவில் ஸ்தபதி உள்ளிட்ட பணிகளில், மரபுக் கலைகள் பட்டதாரிகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், மாமல்லபுரம் கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாமல்லபுரத்தில், அரசு சார்பில், 1957ல், தொழில், வணிகவரி துறையின்கீழ், சிற்பக்கலை பயிலகம் துவக்கப்பட்டது. 1975ல், தொழில்நுட்ப கல்வித்துறை கல்லுாரி, 1991ல், கலை, பண்பாட்டுத் துறை கல்லுாரி என, மாற்றமடைந்தது.ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைகள் பல்கலைக்கழகத்தின் கீழ், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரியாக, தற்போது செயல்படுகிறது.

துவக்கத்தில், சென்னை பல்கலைக்கழகம், தற்போது, இசை, கவின் கலைகள் பல்கலைக் கழகம், மரபு கட்டட, சிற்பக்கலை பட்டம் வழங்குகிறது.இங்கு பயின்ற, சிற்பக்கலை பட்டதாரிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், ஸ்தபதி உள்ளிட்ட பணியிடங்கள், கோவில் புனரமைப்பு பணிகளில், தங்களை நியமிக்க கோரி, அரசிடம் நீண்டகாலமாக வலியுறுத்தினர்.

அரசு நிர்வாகமோ, பாரம்பரிய கோவில்களின் பராமரிப்பு பணிகளில், பெரும்பாலும், பொறியியல் பட்டதாரிகளையே நியமித்தது. இதனால் கலைஞர்கள், அரசு வேலையின்றி, சுயதொழிலில் ஈடுபடுகின்றனர்.இச்சூழலில், ஸ்தபதி உள்ளிட்ட பணிகளில், மரபுக் கலைகள் பட்டதாரி நியமனம் தொடர்பாக, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர், டி.வி.முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில், 'துறை ஸ்தபதி, கோவில் பணிகளில், மரபு கலைகள் பட்டதாரிகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்த தீர்ப்பால், மரபுக் கலைகள் பட்டதாரிகள், அரசு பணி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, மாமல்லபுரம் கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X