சபரிமலை கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (3)
Advertisement
சபரிமலை கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா

இந்த செய்தியை கேட்க

சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மாலை மகர விளக்கு விழாவையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தையும் காண, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.





அதிகரிப்பு


இங்கு, சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணங்கள், இன்று, சரம்குத்தியில், தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.சுவாமி அய்யப்பனுக்கு, இந்த திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலையில், மகர விளக்கு பூஜை நடைபெறும். இதைக் காண, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானபக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.மாலை, 6:00 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்படும். மகர ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இது குறித்து, தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:ஞாயிறு முதல், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க, கோவிலைச் சுற்றி, 200க்கும் அதிகமான மூத்த போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


பாதுகாப்பு பணி



சன்னிதானம் அருகே, 36 வட்டார காவல் துறை ஆய்வாளர்கள், 15 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், 1,400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவைச் சேர்ந்த, 70 பேரும், தொலைதொடர்பு வல்லுனர்கள், 20 பேரும், கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன், தேசிய பேரிடர் நிவாரண படை மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக, 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
15-ஜன-202015:33:25 IST Report Abuse
J.Isaac மகர ஜோதி இயற்கையாக நிகழ்வதா ? இல்லை செயற்கையா ? விளக்கம் கொடுக்கவும் . யாரும் தவறாக நினைக்கவேண்டாம் .
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-ஜன-202013:39:45 IST Report Abuse
SENTHIL NATHAN சாமியே சரணம் ஐயப்பா
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜன-202011:38:22 IST Report Abuse
Lion Drsekar மகரவிளக்கு என்பது காட்டு வாசிகள் மலைமீது ஒரு பாறையின் மீது நின்றுகொண்டு தீப்பந்தம் கொளுத்துகிறார்கள் , அதை அசைக்கும்போது விட்டு விட்டு தெரியுமாம் இந்த விளக்கு, இதை பத்திரிக்கையில் நிரூபித்து காட்டியதாக செய்தி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X