பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பொங்கிய கமிஷனர் விஸ்வநாதன்!

Added : ஜன 15, 2020
Advertisement
 பொங்கல் பொங்கிய கமிஷனர் விஸ்வநாதன்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் நேற்று, நிலைய காவல் துறை குடும்பத்தினருடன், பொங்கல் வைத்துகொண்டாடினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அண்ணா நகர் காவல் நிலையத்தில், காவலர் துறை குடும்பத்தினருடன் சமத்துவ பொங்கல் வைத்துகொண்டாடினார்.பின், கயிறு இழுத்தல், கராத்தே உள்ளிட்ட, 13 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றோருக்கு, பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பின் அவர் பேசியதாவது:கடந்த, 2019ம் ஆண்டை போல் இந்தாண்டும், போலீசார் கொண்டாடும் பொங்கல் விழா, சிறப்பான முறையில் நடக்கிறது. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும், முறையாக திட்டமிட்டு பொங்கல் கொண்டாட்டமும், பொதுமக்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.காணும் பொங்கல் அன்று, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் சுற்றுலா தலங்களில், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மணலில் செல்லக்கூடிய வாகனம் மற்றும் ஆளில்லா விமானம் எனப்படும், 'டிரோன்' கேமரா வாயிலாக, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
அதேபோல, மாலையில், கண்ணகி நகர் காவல் நிலைய எல்லையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தெற்கு மண்டல இணை கமிஷனர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், போலீசார் நடத்தி வரும், 'பாய்ஸ் கிளப்' மாணவ - மாணவியர் நடனமாடி அசத்தினர். அவர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு கமிஷனர் பரிசளித்து, பாராட்டினார்.மேலும், எழும்பூர் காவல் நிலையத்திலும் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X