நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு

Added : ஜன 15, 2020

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, கிளார் பகுதியில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூல பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரவுடி கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, தாமல் பகுதியில், தனிப்படை பிரிவு போலீசார், நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், தாமல் பகுதியைச் சேர்ந்த புவியரசன், 19, என்பதும், ரவுடி தினேஷின் கூட்டாளி என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை குற்றவாளியான, கிளாரில் வசிக்கும் துளசிராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய பம்பு செட்டில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, போலீசார் அங்கு சென்று, சோதனை செய்தனர். 149 நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், 27 ஜெலட்டின் குச்சிகள், கத்திகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், வெடி பொருட்களை பதுக்கியதற்காக, துளசிராமன் தந்தை சம்பத், 52, என்பவரை கைது செய்தனர்.

தினேஷ், தியாகு, மணிமாறன், துளசிராமன் உள்ளிட்ட பல ரவுடிகள், 'குண்டர்' சட்டத்தில் கைதாகி, சிறையில் உள்ளனர்.இதில், தினேஷ், அவனது கூட்டாளியான புவியரசன் மூலம், மீண்டும் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.கடந்த மாதம், திருவள்ளூர் மாவட்டத்தில் வெடி குண்டு வீசி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜீவா, கோபி என, இருவர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X