ஜல்லிக்கட்டு மேல்முறையீடு : சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (12)
Advertisement
ஜல்லிக்கட்டு மேல்முறையீடு : சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

புதுடில்லி: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர்நீதின்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (ஜன.,15) உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அவனியாபுரம் விவசாயிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விடுமுறை கால மனுவில், கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி, கடந்த 20 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்ட கலெக்டர் தலைமையில், எட்டு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதை கவனத்தில் கொள்ளாமல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கலெக்டர் தலைமையிலான, எட்டு பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில், ஜல்லிக்கட்டு நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 'ஜல்லிக்கட்டு சரியாக நடந்து கொண்டிருக்கிறது. சரியாக நடந்து கொண்டிருக்கும் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை,' எனக்கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நேற்று தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
16-ஜன-202002:50:37 IST Report Abuse
B.s. Pillai Throughout the world, there are many cults, in which some of them follow very cruel method of punishing even children in the name of disciplining them. I saw one such documentary. These so called institutions should first stop such cults.In US, there is one such cult where the women have to marry the person who is identified by the head. The women have no choice.If the man so identified is very old and the woman is young also, she has no option. These institutions are nothing but paid representatives of foreign power who want to some sort of disturbance inside this country. The governemnt should identify the real force which operates them and if the intention is malafide, the Government should not hesitate to ban such organisations.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-202016:00:28 IST Report Abuse
Endrum Indian கோர்ட் செய்யவேண்டியது இந்த மாதிரி 1)அவர்களிடம் கேட்க வேண்டியது மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?அப்புறம் எந்த அறிவில் ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என்கின்றாய் 2) தள்ளுபடி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு குறைந்த பட்சம் பெனால்டி அங்கு உள்ள ஜட்ஜின், வக்கீல்கள், காவலர்கள்........இவர்களின் ஒரு நாள் சம்பளம் வசூலாகி வேண்டும் இவர்களிடம்
Rate this:
Share this comment
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
15-ஜன-202011:51:46 IST Report Abuse
R.Kumaresan ஏறுதழுவல் என்ற பெயரில் மாடுகளை வதை செய்வதும் மாடுகள் முட்டி மனிதர்களுக்கு ஏதாவது தவறாக நடக்காமல் இருந்தாலும் சரி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X