பொது செய்தி

தமிழ்நாடு

மீட்கப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

Added : ஜன 15, 2020
Advertisement
 மீட்கப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகில், மீட்கப்பட்ட ஆண் குழந்தை, கருணாலயா குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நடைமேடையில், கடந்த, 10ம் தேதி, நின்று கொண்டிருந்த ரயிலில், பிறந்து, 3 நாட்களே ஆன, ஆண் குழந்தை இருந்தது.அதை, ரயில்வே போலீசார் மீட்டு, திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, சிகிச்சை பெற்ற பின், கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்திலிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு, கலெக்டர் மகேஸ்வரி, ராம் என, பெயர் சூட்டி, முகப்பேர் கிழக்கில் செயல்படும் அரச அங்கீகாரம் பெற்ற கலைச்செல்வி கருணாலயா சிறப்பு தத்து மையத்திற்கு, தற்காலிக பராமரிப்பிற்காக வழங்கினார்.உடன், ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X