பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபரம் ஜல்லிக்கட்டு; காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (7)
Advertisement
பொங்கல்_திருநாள்,Avaniapuram,Jallikattu,அவனியாபுரம்,ஜல்லிக்கட்டு, அவனியாபுரம்ஜல்லிக்கட்டு,AvaniapuramJallikattu

இந்த செய்தியை கேட்க

அவனியாபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று(ஜன.,15) அவனியாபுரத்தில் நடந்தது. மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்த போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் 14 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்காக திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் மேடை, இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, கண்காணித்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் புதனனறு துவங்கியது.
போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டிருந்தன. 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்னர், காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். மாலை 4 மணிக்கு நிறைவடைய இருந்த போட்டி, 4:30 வரை நீட்டிக்கப்பட்டது. முடிவில், மொத்தம் 72 பேர் காயமடைந்தனர்; படுகாயமடைந்த 10 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


சிறந்த வீரர்கள்

14 காளைகளை பிடித்த ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை விளாங்குடியை சேர்ந்த பரத், 3ம் இடம் முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு பெற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-ஜன-202012:33:21 IST Report Abuse
தாண்டவக்கோன் அய்யோ பாவம் நாலு காலு மாடுங்க, ரெண்டு காலுங்க அதுங்கள ஒன்னும் செய்யக்கூடாது 🙏
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-ஜன-202019:34:31 IST Report Abuse
வல்வில் ஓரி நீ தொழுவத்துல இருக்கும்போது அதுங்களுக்கு ஒன்னும் நடக்காது.... கவலை படாதே....
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
15-ஜன-202010:48:49 IST Report Abuse
HSR இப்போ அனுமதி கிடைத்த அப்புறம் ஜல்லிக்கட்டு சல்லி கட்டு ஆகிவிட்டது திடிர்னு வந்த த‌மிழ‌ன்க்கு.. ஹாஹாஹா.. மறுபடியும் தடை போட்டா இப்போ இத்த சட்டையே பண்ணாத கும்பல் முதலில் வந்து போராடும்.. Shame on you dumeels 😁😁😁😁😁
Rate this:
Share this comment
Cancel
Samaniyan - Chennai ,இந்தியா
15-ஜன-202010:34:16 IST Report Abuse
Samaniyan SC should ban this so called sport. Many youngsters risk their lives and the animals also are injured.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X