பொது செய்தி

தமிழ்நாடு

ஆதியோகி ரதத்துக்கு மாநகரில் வரவேற்பு

Added : ஜன 15, 2020
Advertisement

ஈரோடு: கோவையில் இருந்து ஈரோடு வந்த ஆதியோகி ரதத்துக்கு, ஈரோட்டில் மக்கள், பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதன்படி, கோவையில் உள்ள, 112 அடி ஆதியோகி சிலையில் இருந்து, நான்கு ஆதியோகி ரதங்கள் ஜன.,1ல் புறப்பட்டன. அதில் ஒரு ரதம், கடந்த, 5ல் ஈரோடு மாவட்டத்தில் நுழைந்து பல்வேறு பகுதியில் மக்கள் தரிசனத்துக்காக வந்தது. நேற்று ஈரோடு, பவானி பகுதியில் பல்வேறு பகுதியில் மக்கள் தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம், மேட்டூர், சேலம், திருப்பூர், ஊட்டி, கூடலூர் வழியாக, மஹா சிவராத்தியன்று, கோவை சென்றடையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X