பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா: மாணவர்கள், மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Added : ஜன 15, 2020
Advertisement

அரசு பள்ளி, அலுவலகங்களில், பொங்கல் விழாவை, நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.
கோபி வைரவிழா முதல் நிலை நிதியுதவி பள்ளியில், 988 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உஷாராணி தலைமையில், 25 ஆசிரியர்கள் போதிக்கின்றனர். பள்ளியில் பொங்கல் விழாவை, கோலாகலமாக நேற்று கொண்டாடினர். பள்ளி மைதானத்தில், மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். பின் குழந்தைகள் அனைவருக்கும் வழங்கினர்.


*மொடக்குறிச்சி யூனியன், செல்லாத்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செந்தில் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக வட்டார வள மைய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மொடக்குறிச்சி நால்ரோடு ஊ.ஓ.தொ., பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.


*அரச்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் டார்த்தி தலைமையில், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.


*நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், தனியார் கலை அறிவியில் கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் திடலில், ஊர் மக்களுடன் சேர்ந்து, பொங்கல் வைத்து நேற்று வழிபட்டனர். அதை தொடர்ந்து நடந்த விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், உறியடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் மக்களும் கலந்து கொண்டனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X