பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஜன 15, 2020
Advertisement

நடைபாலத்தில் தடுப்பு மாயம்: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நடைபாலத்தில் இருந்து தடுப்பு கம்பிகள் பெயர்ந்து விழுந்தது. இதனால், தண்ணீர் அதிகமாக வெளியேறும் பகுதியில், சுற்றுலா பயணிகள் கடக்க அவதியுறுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் பீதியில் நடக்கின்றனர். நிதானத்தை கடைபிடிக்காமல், நடைபாலத்தில், தடுப்பு கம்பி வசதியை விரைந்து பலப்படுத்த, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீர் வடிகால் வசதி தேவை: ஈரோடு அருகே, 46 புதூர் செல்லும் சாலையில், கருக்கம்பாளையம் பகுதியில் சாலையை ஒட்டி கழிவு நீர் செல்ல சிறிய அளவில் பள்ளம் வெட்டி விட்டுள்ளனர். அதன் மூலம் மழை நீர், வீடுகளின் கழிவு நீர், வயலின் வடிநீரும் செல்கிறது. அவ்விடம் சகதியாக மோசமாக உள்ளது. இவ்விடத்தில் முறையாக கழிவு நீர் வடிகால் வசதி செய்து கொடுத்தால், கொசு தொல்லையும், துர்நாற்றமும், சகதி சேர்வதும் குறையும் என்கின்றர் அப்பகுதிவாசிகள்.

ஆ.தாமரையை அகற்ற வேண்டும்: ஈரோடு, காரைவாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால் தண்ணீரில், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து விரிந்து அடைத்து நிற்கிறது. இதனால் தண்ணீர் ஓட்டம் தடைபட்டுள்ளது. இங்கு செடிகள் தண்ணீர் மீது பாய் போல் படர்ந்துள்ளதால், குப்பை தொட்டியாக நினைத்து, பலர் குப்பை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றத்தின் அளவு கூடுதலாகிறது. வாய்க்கால் தண்ணீரில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினால் நல்லது என்கின்றனர் விவசாயிகள்.

நிரந்தர குப்பை; தீராத தொல்லை: ஈரோட்டில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில், பால்சாமி நகர், சி.ஏ.சி., காலனி அருகே, சாலையோர பாலத்தின் அருகே பல நாட்களாக குப்பை, கடைகளின் கழிவு, கட்டட கழிவு குவிக்கப்படுகிறது. குப்பை கொட்டக்கூடாது என அறிவிப்பிருந்தும், குப்பை முதல், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்லும்போது, அவர் பயன்படுத்திய மெத்தை, தலையணையையும் வீசி செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை தேவை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X