பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் விளைந்தும் விலையில்லை: கொள்முதல் வாய்ப்பு இல்லாமல் கவலை

Added : ஜன 15, 2020
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில், ஐந்தாண்டுக்கு பின், நல்ல மழையால் மக்காசோளம் விளைந்தும், விலை கிடைக்காததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
கடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் பஞ்சாயத்துக்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்காசோளம், பாசி பயறு, தட்டை பயறு, உளுந்து, கொள்ளு, ராகி, சாமை, கம்பு, தினை, சோளம் போன்றவை, உரமின்றி இயற்கையாக விளைவிக்கப்படுகிறது. சேமிக்கும் வசதி, போக்குவரத்து இல்லாததால், விலங்குகளுக்கு அச்சப்பட்டு அறுவடையானதும் விற்கின்றனர். இதை சாதகமாக்கி, இடைத்தரகர்கள், நேரடி வியாபாரிகள், 25 சதவீதத்துக்கு மேல் விலையை குறைத்து வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து சின்னசாலட்டி விவசாயிகள் கூறியதாவது: கடந்த, 2013க்குப் பின், கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், மானாவாரியாக ராகி, கம்பு, மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு அதிகம் பயிரிடப்பட்டது. மக்காச்சோள பயிர், 5,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து அறுவடை நடக்கிறது. வியாபாரிகள் நேரடியாக வந்து, கிலோ, 15 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டு சத்தி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 23 ரூபாய்க்கு மேல் விற்றது. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், கொள்முதல் பட்டியலில் இருந்து கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் நீக்கப்பட்டு விட்டது. இதனால் சொசைட்டிக்கும் செல்ல முடியாது. மக்காச்சோளம் கிலோவுக்கு, ஏழு முதல், 10 ரூபாய் விலை குறைவாக விற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வேளாண் விற்பனை குழு துணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது: கடம்பூர் மலையில், வாரத்தில் ஒரு நாள் கிளை அமைத்து, ஏலம் நடத்த முயன்றோம். ஆனால், பொருட்களை வைக்க இடம், கட்டட வசதி, வாடகை கட்டடம் இல்லை. அதனால்தான் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கிளை அமைக்கவில்லை. இருப்பினும் கொள்முதல் மையம் அமைக்க முயன்றுள்ளோம். கடந்தாண்டு கொள்முதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்காச்சோளம், ராகி, கம்பு, சோளம் போன்ற விளை பொருட்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க, துறை ரீதியாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X