சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

Added : ஜன 15, 2020
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அருகே, அதிவேக கார் மோதியதில், வடமாநில தொழிலாளி பலியானார். சக தொழிலாளர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார், 30; பவானிசாகரை அடுத்த கொக்கரகுண்டியில், ஒரு பேப்பர் மில்லில் பணிபுரிந்தார். நேற்று மதியம், 3:00 மணியளவில், சக தொழிலாளர்கள் இருவருடன், பண்ணாரி சாலையில், நடந்து சென்றார். பகுத்தம்பாளையம் அருகே சென்றபோது, பண்ணாரியில் இருந்து சிறுமுகை நோக்கி அதிவேகமாக வந்த ஹூண்டாய் ஐ-10 கார், கட்டுப்பாட்டை இழந்து மூவர் மீதும் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோதிய வேகத்தில், சாலையோர பள்ளத்தில் கார் இறங்கியது. படுகாயமடைந்தவர்களை மீட்ட, அக்கம்பக்கத்தினர், கொத்தமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ரவீந்திரகுமார் உயிரிழந்தார். மற்ற இருவரும், முதலுதவி சிகிசைக்கு பின், சத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர். கோவை, சிறுமுகையை சேர்ந்த ஐந்து பேர், பண்ணாரி கோவிலுக்கு காரில் சென்றனர். ஊருக்கு திரும்பும் வழியில் விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X