சத்தி பெரிய கடைவீதியில் புழுதி சாலையால் விபத்து

Added : ஜன 15, 2020
Advertisement

சத்தியமங்கலம்: சத்தி-பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில், பெரியகடை வீதி நெரிசல் நிறைந்த இடமாக இருப்பதால், பண்ணாரியில் இருந்து வரும் வாகனங்கள், திப்பு சுல்தான் சாலை வழியாக வரும் வகையில், ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. பாதாள சாக்கடை பணி நடந்ததால், சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை பணி நிறைவடைந்து, மீண்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் சேதமான சாலையை சீரமைக்கவில்லை. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது புழுதி கிளம்பி, இருசக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X