பொது செய்தி

தமிழ்நாடு

வன ஊழியருக்கு விடுமுறை ரத்து

Added : ஜன 15, 2020
Advertisement

மேட்டூர்: பொங்கல் பண்டிகையால், விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், சாதாரண உடையில், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் வனச்சரகத்தில், பாலமலை, உள்ளூர் தண்டா, மேட்டூர் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. அங்குள்ள மலையடிவாரத்தில், ஏராளமான கிராமங்கள் உள்ளன. பொங்கல் விடுமுறைக்கு, கிராமங்களுக்கு திரும்பும் மக்கள், ஒரு வாரம் வரை தங்கியிருப்பர். அப்போது, சிலர் கூட்டாக சேர்ந்து, அருகிலுள்ள வனப்பகுதிக்கு விலங்குகள் வேட்டைக்கு செல்வர். இதை தடுக்க, வன ஊழியர்கள் கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட, வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்காக, ஜன., 13 முதல், 18 வரை, ஊழியர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், மேட்டூர் வனச்சரகத்தில், விலங்குகள் வேட்டையை தடுக்க, வனச்சரகர் தலைமையில் வனவர்கள் உள்பட, 20 ஊழியர்கள், சீருடை அணிந்து சென்றால், வேட்டை கும்பலுக்கு தெரிந்துவிடும் என்பதால், நேற்று முன்தினம் முதல், சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X