பொது செய்தி

தமிழ்நாடு

'புகையில்லா போகி': மாணவர்கள் உறுதி

Added : ஜன 15, 2020
Advertisement

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று, 'புகையில்லா போகி' கொண்டாட, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், உதவி தலைமையாசிரியர் நந்தீஸ்வரன் பேசியதாவது: போகியன்று, 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதை தவறாக புரிந்து, வீட்டிலுள்ள பழைய கலை பொருட்கள், ஓலைச்சுவடிகளை தீ வைத்து எரித்து அழித்து விட்டோம். தற்போது, பழைய டயர், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரித்து, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றனர். மாணவர்களான நீங்கள், இதுபோன்ற தவறு செய்யாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி, பழைய பொருட்களை எரிக்காமல், துப்புரவு ஊழியர்களிடம் கொடுத்து விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பழைய பொருட்களை எரிக்க மாட்டோம் என, மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள்: ஆத்தூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது, மார்கழி காலை, இரவில் வெப்பநிலை குறைந்து, பனிமூட்டம் காணப்படும். அந்த நேரத்தில் தேவையற்ற பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை, நுண்துகள் வெளியேறி, அடர்த்தியான புகைமூட்டம் உண்டாகும். இதனால், பார்க்கும் திறன் குறைந்து, சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். போகியன்று டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கந்தக டை ஆக்சைடு, டையாக்சின், ப்யூரான், நச்சுத்துகள்கள் காற்றில் கலக்கின்றன. கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சலும், சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நோய்களும் ஏற்படுவதாக, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X