பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு மையங்கள் 100ல் பழைய பொருள் சேகரிப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

சேலம்: போகிப்பண்டிகையில், பழைய பொருட்களை எரிப்பதை தடுக்க, சேலம் மாநகராட்சியில், 100 இடங்களில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், சிறப்பு மையத்தை தொடங்கிவைத்து, கமிஷனர் சதீஷ் பேசியதாவது: மக்கள், தங்கள் வீடுகளில் பயன்படுத்திய, பழைய பிளாஸ்டிக், கோரைப்பாய், டயர் உள்ளிட்டவற்றை, போகிப்பண்டிகையில் எரிப்பதன் மூலம், காற்று மாசு ஏற்படுகிறது. புகையில்லாமல் போகியை கொண்டாட, சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். நான்கு மண்டல அலுவலகங்கள், புது, பழைய பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தைகள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், 16 உள்ளிட்ட இடங்களில், சிறப்பு மையங்கள் அமைத்து, டயர் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

4 டன் கழிவு: ஆட்டையாம்பட்டி பேரூராட்சி சார்பில், போகி, பொங்கல் விழாவை, புகையில்லா பண்டிகையாக கொண்டாட, மக்களுக்கு, துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாளில், மக்களிடமிருந்து, 4 டன் கழிவு பெறப்பட்டதாக, பேரூராட்சி செயல் அலுவலர் லாரன்ஸ் தெரிவித்தார். அத்துடன், மக்கள், தங்கள் வீடு, கடைகளில் சேரும் குப்பை கழிவை, மட்கும், மட்காதவை என பிரித்து, துப்புரவு பணியாளர்களிடம் மட்டும் வழங்க கேட்டுக்கொண்டார்.

போகிப்பண்டிகையில் இயங்கிய பள்ளிகள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில், தொடர்ந்து, 10 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், போகிப்பண்டிகையில், தமிழகத்தில் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறு நாளில், பள்ளி வேலைநாளாக செயல்படலாம் என்ற விதிமுறை இருந்தாலும், பெரும்பாலான பள்ளிகள், நேற்று கடைப்பிடிக்கவில்லை. ஏற்கனவே ஈடுசெய்ய வேண்டிய நாட்கள் நிறைய இருப்பதால், தலைமையாசிரியர்கள், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X