பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற உணவுபொருள் விற்பனை: ரூ.44 லட்சம் வசூல்

Added : ஜன 15, 2020
Advertisement

சேலம்: கலப்பட, தரமற்ற உணவுப்பொருள் விற்பனை குறித்து, ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறையினர், கடந்தாண்டு, 44 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
சேலம் மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள், கடந்தாண்டு, ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, ஓட்டல், மளிகை கடை, ஷாப்பிங் மால், குடோன், பேக்கரி, டீக்கடை, இறைச்சிக்கடை, உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை நடந்தது. அப்போது, உணவு பொருட்கள் தரமறிய, மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியதில், தரமற்ற, போலி என கண்டறியப்பட்டு, 134 குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. முடிவில், நான்கு லட்சத்து, 49 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. அதில், பான்மசால், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பதுக்கியது, கலப்பட டீத்தூள், உணவு பொருட்களில் செயற்கை நிறமூட்டி அதிகளவில் சேர்த்தல் உள்ளிட்ட வழக்கில், அதிக அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், தரமற்ற, கலப்படம் உள்ளிட்ட, 80 சிவில் வழக்கு, டி.ஆர்.ஓ., நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, 39 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டில் மட்டும், மொத்தம், 44 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X