சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு சம்பவத்தில் 2 பேர் சாவு: 3 பேர் காயம்

Added : ஜன 15, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த இரு வேறு சம்பவத்தில், இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
* திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த, குண்ணங்குப்பத்தை சேர்ந்தவர் அமாவாசை, 75, விவசாய தொழிலாளி; ராஜாதோப்பு பகுதியில் உள்ள வயலுக்கு, நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் நடந்து சென்றார். சிறுநாத்தூர் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


* ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த பி.கே.பள்ளியை சேர்ந்தவர் ஆதிநாராயணன், 42. இவர், தனது நண்பர்கள், சலபதி, 41, சீனுவாசலு, 39, நரேஷ், 40, ஆகியோருடன் இண்டிகா காரில், கடந்த, 11ல், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு மீண்டும், அன்றிரவு ஊருக்கு திரும்பினர். ஆதிநாராயணன் காரை ஓட்டி சென்றார். போளூர் அடுத்த நற்குன்றுமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் நிலை தடுமாறி, திடீரென சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில், நான்கு பேரும் படுகாயமடைந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று, ஆதிநாரயணன் உயிரிழந்தார். இது குறித்து போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X