பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 'திருவூடல் விழா'

Added : ஜன 15, 2020
Advertisement

திருவண்ணாமலை: மனிதனின் இல்லற வாழ்வில், 'ஊடலுக்கு பின், கூடல்' என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, திருவூடல் விழா நடக்கிறது.


பராசக்தி அம்மனை வழிபடாமல், அருணாசலேஸ்வரரை நினைத்து தவமிருந்த, பிருங்கி மகரிஷிக்கு காட்சித்தர, அருணாசலேஸ்வரர் புறப்பட்டார். இதை, பராசக்தி அம்மன் தடுக்க, அதையும் மீறி, அருணாசலேஸ்வரர் சென்றார். இதனால் இருவரிடையே 'திருவூடல்' ஏற்படும். இருவரையும், சமாதானம் செய்ய சுந்தரமூர்த்தி நாயனார் முயல்வார். ஆனால், இருவரும் ஏற்க மறுத்து, அருணாசலேஸ்வரர் பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க செல்வார். செல்லும் வழியில், குமரக்கோவிலில் இரவு தங்கி, மறுநாள் கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுப்பார். அப்போது வழியில், கொள்ளையர்களிடம் அருணாசலேஸ்வரர், நகையை பறிகொடுத்து கோவிலுக்கு செல்வார். அப்போது அருணாசலேஸ்வரரிடம், தம்மை மதிக்காத பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்ததால்தான், நகையை பறிகொடுக்கும் நிகழ்வு நடந்ததாக பராசக்தி அம்மன் கூறி, 'மறுவூடல் விழா' நடக்கும். இதையறிந்த பிருங்கி மகரிஷி, தன் தவறை உணர்ந்து, அருணாசலேஸ்வரருடன் பராசக்தி அம்மனையும் சேர்த்து வழிபட்டார் என, தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூர்ந்து, 'ஊடலுக்கு பின் கூடல்' என்பதை விளக்கும் வகையில், ஆண்டுதோறும், ஜன.,16ல், 'திருவூடல் விழா' மறுநாள், 17ல், 'மறுவூடல் விழா' நடத்தப்படுகிறது. இந்த விழாவை காணும் தம்பதியினரிடையே ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X