அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்' : காங்., நிர்வாகிகள் சூளுரை

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (99)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

'மாநகராட்சி உள்ளிட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிட்டு, தி.மு.க.,விற்கு பாடம் புகட்டுவோம்' என, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறினர்.latest tamil news
சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திருநாவுக்கரசர், தமிழக காங்., தலைவராக இருந்த போது, 'நீங்கள் தான் தேசிய கட்சியாச்சே... வேண்டுமானால், தனித்து போட்டியிடலாமே' என, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் ஏளனமாக பேசினார். நாங்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம்.


பகடை காய்
latest tamil news
உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு குறித்து, சதவீத கணக்கில் பேச காங்கிரசை அனுமதிக்கவில்லை. மாவட்ட அளவில் பேசும்படி கூறி, எங்களை நம்ப வைத்து, கழுத்தை அறுத்து விட்டனர். தி.மு.க., மோசமான கட்சி; பா.ஜ.,வுடன் கைகோர்க்க காத்திருக்கிறது. காங்கிரசை கழட்டி விட நேரம் பார்த்து காத்திருந்து, அறிக்கையை ஒரு பகடை காயாக மாற்றி உள்ளனர்.கே.எஸ்.அழகிரியின் குடும்பம், திராவிடர் கழகத்தை சேர்ந்த குடும்பம். அவர் சுயமரியாதைக்கு சொந்தக்காரர்.ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில், எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தன் பதவியை, ராஜினாமா செய்யவும், அவர் தயங்க மாட்டார்.

அழகிரியின் அறிக்கை, ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. டில்லி மேலிடத்தின் ஒப்புதல் பெற்று, தொண்டர்களின் உள்ள குமுறலை தான், அவர் வெளியிட்டார். அழகிரியின் அறிக்கையை, தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்று, ஆதரவு அளித்து வருகின்றனர்.


'டிபாசிட்' இழப்பு
latest tamil news
கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, தனித்து போட்டியிட்ட தி.மு.க., சில லோக்சபா தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்தது. காங்கிரசுக்கு கூட்டணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தி.மு.க., இல்லை என்றால், அ.தி.மு.க., அல்லது பா.ம.க., அல்லது ரஜினி, கமல், தினகரன் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாநகராட்சி உள்ளிட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்., பிரிக்கும் ஓட்டுக்கள், தி.மு.க., வெற்றியை பாதித்து, அக்கட்சிக்கு பாடம் புகட்டுவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
16-ஜன-202009:22:26 IST Report Abuse
Subburamu Krishnaswamy All the so called congress leaders in Tamil Nadu are not any support from the voters of this state. They are the just slaves of Sonia family. They will become an extinct species in Tamil Nadu if they contest any elections without alliance with other groups. All loose talk will not serve any purpose.
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
16-ஜன-202005:58:45 IST Report Abuse
Kalaiselvan Periasamy தி மு க மற்றும் அ தி மு க , ஆட்சி இல்லாத ஒரு அரசாங்கத்தை எப்போது தமிழ் நாடு கொள்கிறதோ அப்போதுதான் விடிவு பிறக்கும். இதற்க்கு ஒரே வழி , ப ஜ க , காங்கிரஸ் , அல்லது புதிய தரமான அரசியல் கட்சி என்று ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி அமைய கொடுத்து யாரும் ஊழல் செய்ய பயப்பட செய்ய வேண்டும் . அதை போன்றே மக்களும் பணம் இலவசம் என்று வாங்கும் பிச்சைக்கார தன்மையை விட்டு நாடு செழிப்புற நல்லாட்சி செய்யும் உண்மையான பொதுநலம் கொண்ட அரசியல் வாதிகளை தேர்வு செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
16-ஜன-202003:47:28 IST Report Abuse
Kunjumani என்ன பாடங்கன்னா? மன்மதக்கலையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X