பொது செய்தி

தமிழ்நாடு

பின்தங்கிய பகுதியில் வசிப்போரை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தல்

Added : ஜன 15, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் சுருக்க திருத்தப்பணிகள் தொடர்பாக, மாவட்ட பார்வையாளர் மதிவாணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக, மாவட்ட பார்வையாளராக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குனர் மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வாக்காளர் சுருக்கத் திருத்த பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று தர்மபுரி வந்தார். கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மலர்விழி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், மாவட்ட பார்வையாளர் மதிவாணன் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலை, 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை கட்டாயம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதே நேரத்தில், உயிரிழந்தோர் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களின் பெயர்களை இணையதளம் வழியாக சேர்க்கலாம். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள், மாற்றுத்திறன், திருநங்கைகள் ஆகியோரை தவறாமல் பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், அரூர் சப் - கலெக்டர் பிரதாப், தர்மபுரி சப் - கலெக்டர் (பொ) தேன்மொழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதாராணி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து மாவட்ட பார்வையாளர், பென்னாகரம் தாலுகா சறுக்கல்பாறை கிராமத்தில், நடந்த சுருக்க திருத்தப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X