பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் நிலையத்தில் அறிவியல் ஆலோசனை கூட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், பத்தாவது அறிவியல் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவஹர்லால் தலைமையில் நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்த இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவஹர்லால், வரும் காலத்தில் வேளாண் அறிவியல் நிலையம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார். ஐதராபாத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஆராய்சி மைய முதுநிலை விஞ்ஞானி பாஸ்கரன், விவசாயிகள், தங்ளுக்கு ஏற்படும் பிரச்னைகளை, இந்த வேளாண் அறிவியல் நிலையத்தில் எடுத்துரைத்து, இதன் செயல்பாட்டினை உபயோகப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவசங்கர்சிங், வேளாண் துறையில் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், 15 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ள பயிர் ரகங்களை, தற்போது அறிவித்துள்ள பயிர் ரக பட்டியலுக்குள் சேர்க்க வேண்டும். வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்களை குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் தெரிவித்தார். முன்னதாக, விவசாயிகள் மற்றும் இந்நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X